காலையில் என்னை எழுப்பியது அந்த செல்ஃபோன் ஒலி, அது எனது நண்பன் குலதீப்பின் ஃபோன். அவன் ரூமில் இல்லை. எனக்கு பொறிதட்டியது அவன் டீக்கடைக்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்று. குலதீப்பும் டீக்கடையும் பிரிக்கமுடியாத ஒன்று பாலையும் நீரையும் போல.
அவனைக்காண நடந்து சென்றேன். டீயை தேன் போல பருகுவதை கண்டேன், இதனால்தான் தமிழில் டீயை தேனீர் என்கிறார்களோ என்று தோன்றியது. “குலதீப்… குலதீப்…” என நான் கூப்பிடுவது அவன் காதில் விழவில்லை என்பதை சிறிது நேரம் கழித்துத்தான் உணர்ந்தேன்.
அவன் அந்த டீயை முடிக்கும் வரை காத்திருந்தேன். அவன் அதை முடிப்பதற்கு முன் “இன்னொரு டீ” என்றான். நிலமையை புரிந்து வீட்டுக்கு நடக்க ஆரம்பிதேன்…
(எனது நினைவுகள் தொடரும்)
No comments:
Post a Comment