Thursday, August 28, 2008

மின்சாரக் கனவு

கேட்க திகட்டாத இசை
கேட்டாலும் மற்க்காத ஓசை
'வெண்னிலவே'வில் நான்
வின்னுக்கே செல்கிறேன்
இசை எனும் அமுதினை
உண்ட அனுபவம்.

'அன்பென்ற மழையிலே'
இசை மழை பொழிந்து
அதிரூபனை நினைவுபடுத்திய
அழகிய, அர்த்த்முள்ள இசை.

ஆசைக்காக
'தங்கத்தாமரை' இசை
பழைய விளக்கில் புதிய எண்ணெயுடன்
எரியும் ஒரு உற்சாக விளக்கு.

'பூ பூக்கும் ஓசையில்'
நான் கேட்ட புதிய ஓசை
நேஞ்சை நெகிழ்விக்கும்
நீண்ட கால ஆசை.

'மான மதுரையில்' - நான்
குஷியாக கேட்ட குற்றால இசை.

இத்தனையும் தந்த - இனிய
இளைய ரஹ்மானே
வாழ்த்துகிறேன் உன்னை
வழங்கிவிட்டேன் என்னை
வாழ்நாள் முழுவதும் - உன்
இசை கேட்க.

(இயற்றிய தேதி: 19/6/1997)

விழித்தெழு தோழா

விழித்தெழு தோழா! விழித்தெழு
தூக்கம் எனும் போர்வையை தூக்கி எறி
ஊக்கம் எனும் உற்சாக பாணத்தை அருந்து
சோம்பல் எனும் சிகரத்தில் இருந்து கீழே வா!
இங்கு உனக்காக காத்திருக்கிறது
வெற்றியை நோக்கிச்செல்லும் விமானம்.

உயர்வு எனும் படகில்
மகிழ்சி எனும் கடலில் - செல்ல
விழித்தெழு தோழா! விழித்தெழு.

(இயற்றிய தேதி: 25/4/1997)

கை கடிகாரம் (Watch)

ஆசிரியர் எப்பொழுது வெளியே செல்வார்? - எனும் கேள்விக்கு
அழகாக பதில் அளிக்கும் ஆள் நீ!

(இயற்றிய தேதி: 8/8/1996)

Friday, August 22, 2008

இயற்கை காட்சி

இது நான் எழுதிய முதல் கவிதை. 26-07-1996 அன்று எழுதப்பட்டது. இன்றும் (23-08-2008) என் நினைவில் உள்ளது இக்கவிதையை எழுத தூண்டிய காரணி.

அப்பொழுது நான் நவோதயா வித்யாலையா, புதுச்சேரி பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். எங்கள் பள்ளி வளாகத்தை சுற்றிலும் பச்சை பசேல் என மரங்கள் (Green belt) இருக்கும். பள்ளியில் மாலை விளையாட்டு நேரத்தில், கால்பந்து விளையடிவிட்டு நானும் என் நண்பனும் (விஜயவேலன்) மைதானத்தின் அருகில் உள்ள புல்பரப்பில் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தோம்.

விளையாடிய களைப்பில் இருந்ததால், காற்று என்னை மென்மையாக வருடுவது போல் உணர்ந்தேன். தலையை சாய்த்து காற்று வரும் திசையில் பார்த்தபொழுது, என் கண்னில் பட்டது அழகிய பச்சை மரங்களும் (பென்சில் மரம், அப்படித்தான் அதை அழைப்போம்), அதன் அசைவுகளும். இதில் லயித்து இருக்கும் போது, என் மூக்கை துளைத்தது ஓர் துர்நாற்றம், அது எதிரே இருக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையினால். அந்த கரும்புகை, மெல்ல மெல்ல பச்சை மரங்களை மூடியது. அறிவியல் ரீதியக அவை மரங்களுக்கு எற்படுத்தும் பாதிப்பை காட்டிலும், என் மனதை அது வெகுவாக பாதித்தது. அப்போழுது என் மனதில் தோன்றிய எண்ணங்களின் வெளிப்பாடே இக்கவிதை.

இயற்கை காட்சி

நான்

எங்கேயும் எப்போதும் காணக்கூடிய காட்சி

அது என்ன காட்சி?

ஓ! அதுவே இயற்கை காட்சி.

தேன்,

அது எப்போது சுவைத்தாலும் இனிமை குறையாது

அதற்கு விலையே கிடையாது

அதை ரசித்தால் பொழுதே விடியாது.

வான்,

காடு, அருவி, மலை

என அதிலே ஒரு அற்புத கலை,

இதற்கு எங்கெங்கும் கிளை.

போடுகிறார்கள் வலை – அதுவே

தொழிற்சாலைகள் வைக்கும் உலை,

கைவசம் இருக்கிறது அழிக்கும் கலை – ஆகையால்

குறைகிறது இதன் ஒப்பற்ற விலை.


(இயற்றிய தேதி: 26-07-1998)

Tuesday, August 5, 2008

குலதீப்பும் நெகோஷியனும் பாகம் – 1

குலதீப் தன்னை நம்பியதை விட “நெகோஷியஷன்” யுக்தியை மிகவும் நம்பியவன். சிறு சிறு விழயங்களில் கூட அதை அவன் திரம்பட உபயோகித்ததை பற்றி அவன் கூறும் போது, அதில் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை உணர முடிந்தது. குளியலறைக்கு இடம் பிடிப்பதிலிருந்து, புதிதாக சேரும் நிறுவனத்தில் ஊதிய உயர்வுவரை அதை கையாண்டான்.

குலதீப்பிடம் எதை பற்றி வேண்டுமானாலும் நெகோஷியஷன் செய்யலாம் ஆனால் நெகோஷியஷன் செய்வதை கைவிடுவதை பற்றி நெகோஷியஷன் செய்ய முடியாது என அவனிடம் பேசிய பலர் உணர்ந்திருப்பர்கள்.

அன்று யார் ஷாம்ப்பூவை பயன்படுத்துவது என்பதர்காக நெகோஷியஷன் ஆரம்பிததது, அதற்கு குலதீப், “நான் இன்று இண்டர்விவ் செல்ல வேண்டும் நான்தான் பயன் படுத்துவேன் என்றான்”. எதிர் நபரோ, “நான் இரண்டு வாரமாக தலை குளிக்கவில்லை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்” என கெஞ்சினார். குலதீப் ஒன்றுக்காக நெகோஷியேட் செய்ய ஆரம்பிதால் அதற்காக விந்தையான காரணத்தை கூட கொண்டு வருவான். அன்றும் அப்படியே, “..............................”

(தொடரும்)

குலதீப்பும் டீக்கடையும் பாகம் – 2

டீ கடையிலிருந்து வீட்டிற்கு நடந்து வரும்போது எண்ணிக்கொண்டேன், “காலை உணவை எத்தனைமுறை தவறவிட்டிருக்கிறோம் என்று”. ஆனால் குலதீப் அப்படி இல்லை. அவனுக்கு டீதான் காலை உணவு என்பது சொல்லாமலே புரிந்தது. எனது எண்ண அலைகளில் குறுக்கிட்டது எனது வீட்டு படிகள்.

வீட்டிற்குள் நுழையும்போது திரும்பவும் ஒலித்தது என் கையிலிருக்கும் குலதீப்பின் செல்ஃபோன். காலையில் என்னை எழுப்பிய அதே எண். முக்கியமான தகவலாக இருக்குமோ என எண்ணி நானே அட்டன்ட் செய்ய முடிவெடுத்தேன். ஆன்சர் பட்டனை அழுத்தி ஹலோ சொன்னவுடன், எதிர் முனையில் இருக்கும் குரல் ஒலித்தது, “ஹெலோ சார்!, வீ ஆர் காலிங் ஃப்ரம் **** பாங்க் (ப்லா… ப்லா… ப்லா…) ஆர் யு கோய்ங் ஃபார் இட்?”. விருப்பமில்லை என கூறி கட் செய்தேன்.

காலையில் தொல்லை தாங்க முடியவில்லையே, இதற்காகவா குலதீப்பை தேடி சென்றோம் என எண்ணுகையில்… யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு, கதவை திறந்தேன். குலதீப் முகம் முழுவதும் மலர்ச்சியுடன் நிற்பதை கண்டேன். எனது கையிலிருக்கும் அவனது செல்போனை பார்த்ததும், “ஃடிட் சம்படி கால் மி?” என்று கேட்டான். அவனுக்கு பதிலளிக்கும் முன், அவன் கையிலிருக்கும் டீ கப்பை பார்த்து புன்னகை வெள்ளத்தில் விழுந்தேன்.

(முற்றும்)

குலதீப்பும் டீக்கடையும் பாகம் - 1

காலையில் என்னை எழுப்பியது அந்த செல்ஃபோன் ஒலி, அது எனது நண்பன் குலதீப்பின் ஃபோன். அவன் ரூமில் இல்லை. எனக்கு பொறிதட்டியது அவன் டீக்கடைக்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்று. குலதீப்பும் டீக்கடையும் பிரிக்கமுடியாத ஒன்று பாலையும் நீரையும் போல.

அவனைக்கா நடந்து சென்றேன். டீயை தேன் போல பருகுவதை கண்டேன், இதனால்தான் தமிழில் டீயை தேனீர் என்கிறார்களோ என்று தோன்றியது. “குலதீப்… குலதீப்…” என நான் கூப்பிடுவது அவன் காதில் விழவில்லை என்பதை சிறிது நேரம் கழித்துத்தான் உணர்ந்தேன்.

அவன் அந்த டீயை முடிக்கும் வரை காத்திருந்தேன். அவன் அதை முடிப்பதற்கு முன் “இன்னொரு டீ” என்றான். நிலமையை புரிந்து வீட்டுக்கு நடக்க ஆரம்பிதேன்…

(எனது நினைவுகள் தொடரும்)